வியாழக்கிழமை 27 ஜூன் 2019

மலச்சிக்கலை போக்கும் ஆரோக்கிய பழரசம்

By கோவை பாலா| DIN | Published: 22nd May 2019 11:03 AM

 

அன்னாசி பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்
 
அன்னாசி பழம் - 100 கிராம்
பால் - 50 மி.லி
வெல்லத் தூள் - 20 கிராம்
மிளகுத் தூள் - 3 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் - 3 சிட்டிகை

செய்முறை : அன்னாசி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.பின்னர் அவற்றை நன்கு அலசி மிக்ஸியில் போட்டு அதனுடன் பால், மிளகுத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு அரைத்து ஜூஸாக்கி பருகி வரவும்.

பயன்கள் : தலைக்கு குளித்தால் உண்டாகும் சளித் தொல்லையால் பாதிக்கப்படுபவர்களுக்கு அருமருந்தாகும். தலையில் ஏற்படும் நீர் கோர்வை மற்றும் மலச்சிக்கலை போக்கும் ஆரோக்கிய பழரசம் இந்த அன்னாசி பழ ஜூஸ்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : piles stomach ache indigestion ஜீரணக் கோளாறு மலச்சிக்கல்

More from the section

இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை
நீதி ஆயோக் தரவரிசை தவறானது: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
‘ட்ரிமேன் சிண்ட்ரோம்’ வலி தாங்க முடியவில்லை என் கைகளை வெட்டி விடுங்கள் எனக் கதறும் வங்க தேசத்து இளைஞர்!
இளம் பருவத்தினரும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்!
முகத்திலுள்ள கரும்புள்ளிகளை அகற்ற இதுதான் பெஸ்ட்!