புதன்கிழமை 19 ஜூன் 2019

ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளுக்கான ஆரோக்கிய டிப்ஸ்

By கோவை பாலா| Published: 09th May 2019 12:26 PM


வல்லாரைக் கீரைத் துவையல்

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை - 100 கிராம்
மிளகு - 10 கிராம்
சின்ன வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - இரண்டு சிட்டிகை
மஞ்சள் - 5 சிட்டிகை
உப்பு, நல்லெண்ணெய் - (தேவையான அளவு)

செய்முறை : பெருங்காயம், மஞ்சள், உப்பு இவைகளைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி அவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து துவையலாக்கி கொள்ளவும். 

பலன்கள் : இந்த துவையலை வாரம் மூன்று முறையாவது வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் மூளைத் திறன் அதிகரிக்கும். மேலும் சில குழந்தைகள் அதிக சுறுசுறுப்பாக (Hyper Active)இருப்பார்கள். இவர்களை தொடர்ந்து ஒர் இடத்தில் பிடித்து வைக்க முடியாது. எதையாவது தேவையில்லாமல் பேசுவது , கோபப்படுவது, சண்டையிடுவது, காரணமின்றி அழுவது, நினைவாற்றல் குறைவது என இருப்பார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு வல்லாரைத் துவையல் மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : hyper active kids tips ஹைபர் ஆக்டிவ் சுறுசுறுப்பு

More from the section

காய்கறிகளில் சத்துக்கள் வீணாமல் இருக்க இதைச் செய்யுங்கள்!
அரசு மருத்துவமனையில் முழங்கால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை
புதிய மருத்துவமனைகளுக்கு விரைவில் உரிமம்: மருத்துவ சேவைகள் இயக்குநரகம் தகவல்
உடல் உயிர் ஆனந்தம்
சென்னை மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு கண்காட்சி