செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பம் கிடைக்க இது உதவும்!

By கோவை பாலா| Published: 04th May 2019 03:21 PM

 

கலவைக் கீரை சத்துமாவு

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை (காய்ந்தது)  - 100 கிராம்
தூதுவளைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
பசலைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
அரைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
உளுந்து - 100 கிராம்
சிறுபருப்பு - 100 கிராம்
கொண்டைக் கடலை - 100 கிராம்
பச்சரிசி -  1 கிலோ
ஏலக்காய் - 5 கிராம்
மிளகு - 10 கிராம்     

செய்முறை : முதலில் கீரைகளைத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

பலன்கள் : தினமும் இரண்டு ஸ்பூன் அளவு மாவை எடுத்து தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன் சின்ன வெங்காயத்தை வதக்கி கஞ்சியில் சேர்த்து தினமும் அதிகாலை வேளை அல்லது மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும். 

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : marriage life couple தாம்பத்தியம் உறவு கலவை கீரை

More from the section

மருந்து அட்டைகளில் க்யூ-ஆர் குறியீடு அவசியம்: வரைவு அறிவிக்கை வெளியீடு
புதுக்கோட்டையில் ரூ.10 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
அரசு மருத்துவர்கள் இன்று மனிதச் சங்கிலி போராட்டம்
நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்