செய்திகள்

குளிர் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!

11th Dec 2019 01:38 PM

ADVERTISEMENT
  • குளிர் காலத்தில் சோப்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். தோலில் எண்ணெய் தன்மை குறைந்து போய்விடுவதால் சோப்பு பயன்படுத்தினால் மேலும் வறட்சி தோன்றும்.
  • கடலைமாவு அல்லது பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கலாம். வேண்டுமானால் கிளிசரின் கலந்த மென்மையான சோப்புகளை பயன்படுத்தலாம்.
  • குளிர் காலத்தில் உடலில் ரத்த ஓட்டம் குறையும். எனவே தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி உடம்பில் தேய்த்து, சிறிது நேரத்திற்கு பின்னர் இளஞ்சூடான நீரில் குளித்தால் குளிர் தாக்காது. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
  • முகத்தில் போடும் க்ரீம் வைட்டமின் கலந்ததாக இருந்தால் முக வறட்சி மாறும்.
  • காலை, மாலை உலாவுதல், உடற்பயிற்சி செய்தல் அல்லது வேலைகளைச் செய்தல் போன்றவை உடம்பை கதகதப்பாக வைக்கும்.
  • வெயில்காலத்தில் சன் ஸ்கீரின் லோஷன் பயன்படுத்துவது போல, குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசிங் க்ரீம் பயன்படுத்துதல் தோலின் பராமரிப்புக்கு உதவிடும்.
  • சருமம் வறண்டு போகாமல் இருக்க பாதாம் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்யை உடலில் பூசுதல் நல்லது. 
  • குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு மொறு மொறுப்பான பிஸ்கட், கடலை, பாப்கார்ன், பிரட் போன்றவற்றை கொடுப்பது நல்லது.
  • அதிக அளவு எண்ணெய்ப் பண்டங்களோ, க்ரீம் சேர்த்த பேக்கரி வகை தின் பண்டங்களோ தவிர்ப்பது நல்லது.
  • குளிர்காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும் இதைத் தவிர்க்க சிறிது நல்லெண்ணெய்யை நன்றாக சூடாக்கி, ஒரு துண்டு மெழுகுவர்த்தியை இதனுள் போட்டால் மெழுகு கரைந்து உருகிய நிலைக்கு வரும். அந்த மெழுகை எடுத்து பாத வெடிப்பின் மேல் பூசி வர வெடிப்பு மாறும். 

- அ.சித்ரா அனந்தகுமார், கன்னியாகுமரி.
 

Tags : health tips
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT