செய்திகள்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைந்து வழங்கும் ஆரோக்கியம் கண்காட்சி! பரிசோதனைகளும் இலவசம்!!

30th Aug 2019 01:18 PM

ADVERTISEMENT


உடல் நலன் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கண்காட்சியை அப்போல்லோ மருத்துவமனையுடன் இணைந்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்துகிறது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தின் முதல் அரங்கில் இந்த கண்காட்சி ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இவ்விரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்த கண்காட்சியில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசம்.

அது மட்டுமா, இந்த கண்காட்சியில் பங்கேற்று பல முக்கிய மருத்துவப் பரிசோதனைகளை நீங்கள் இலவசமாகவே செய்து கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியில் வழங்கப்படும் இலவச மருத்துவ பரிசோதனைகள்..

ADVERTISEMENT

இலவச மருத்துவ பரிசோதனைகள்

  • BMI & BMD பரிசோதனை
  • சர்க்கரை பரிசோதனை
  • செவித்திறன், கண் & பல் பரிசோதனை
  • வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்களுக்கு இலவச ஆலோசனை
  • ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆலோசனை

மாற்று மருத்துவம்

  • வர்ம சிகிச்சை & நாடி பார்த்தல்
  • ஆயுர்வேத / சித்த மருத்துவ ஆலோசனைகள்
  • பேலியோ டயட் கவுன்சிலிங்
  • ஆர்கானிக் பொருட்கள்
  • உங்கள் உடல் வாதமா / பித்தமா / கபமா தெரிந்து கொள்ளுங்கள்.
  • நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

 

இது மட்டுமல்ல, பொதுமக்களுக்கு உடல்நலம் சார்ந்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் பல துறை சிறப்பு மருத்துவர்களின் சிறப்புரைகளும் இடம்பெற உள்ளது.

அந்த வகையில் முன்னெச்சரிக்கை / நோய்த்தடுப்பு மருத்துவ சோதனைகள், ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும் எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்து அப்போலோ மருத்துவர் டாக்டர் எஸ். திலகவதி சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு சிறப்புரையாற்றுகிறார்.

பேலியோ விழிப்புணர்வு குறித்து சங்கர்.ஜி (ஆரோக்கியம், நல்வாழ்வு) இரு நாட்களும் மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார்.

ஆல்மா வேலாயுதம்  - உணவும் வாழ்வும் என்ற தலைப்பில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கும், நோயின்றி வாழ்வது எப்படி என்ற தலைப்பில் ஞாயிறு மாலை 6 மணிக்கும் உரையாற்றுகிறார்.

மேலும் விவரங்களுக்கு: 92824 38120 / 92824 41749
 

ADVERTISEMENT
ADVERTISEMENT