சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

உடல் பலம் அதிகரிக்க

By கோவை பாலா| Published: 28th November 2018 11:09 AM

 

வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச் சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு - அரசாணிக்காய்(100 கிராம்) தோலுடன் நன்றாக துருவி அதனுடன்  தேங்காய் (100 கிராம் துருவியது) , முருங்கை விதைப்  பருப்பு (10) அளவு சேர்த்து  மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து  காலை மாலை என இரு வேளையும் ஜூஸாக குடித்து வரலாம். மதியம் வேளை உணவில் அரசாணிக்காயை தோலுடன் துருவி நீராவியில்  வேகவைத்து அதனுடன் தேங்காய் நிறையத் துருவிப் போட்டு பொறியலாக செய்து சாப்பிட்டு வரவும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து  அதனுடன் தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : body weight strength உடல் பலம் உடல் எடை உடல் நலம்

More from the section

பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
அரசு பல் மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது: நோயாளிகள் அலைக்கழிப்பு
குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று ரத்தம்: மருத்துவக் கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்
இது எனக்கு மிகப் பெரிய சவால்! ஆனாலும் வெற்றி பெற்றேன்! மருத்துவர் சாந்தி பிரியாவின் சாதனை!
தீராத நோய்களை எல்லாம் குணமாக்கும் அற்புதமான சூப் இதுதான்!