வரப்போகும் குளிர்காலத்திடம் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்க வேண்டுமா? இந்த 10 எண்ணெய்களால் மசாஜ் செய்யுங்கள்!

கடுமையான வெயில் மற்றும் மழைக் காலத்தை தொடர்ந்து இதோ வரப் போகிறது குளிர் காலம்! இந்தக் குளிர்காலத்தில் உங்கள் கை குழந்தையைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
வரப்போகும் குளிர்காலத்திடம் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்க வேண்டுமா? இந்த 10 எண்ணெய்களால் மசாஜ் செய்யுங்கள்!

கடுமையான வெயில் மற்றும் மழைக் காலத்தை தொடர்ந்து இதோ வரப் போகிறது குளிர் காலம்! இந்தக் குளிர்காலத்தில் உங்கள் குழந்தையைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் சந்திக்கும் முதல் பருவ கால மாற்றம் இது என்பதால் சில பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இயற்கையாகவே இதைப் போன்ற பருவ கால மாற்றங்களைச் சந்திக்க அவர்களை நாம் தயார் படுத்த வேண்டும்.

குளிர்காலத்தில் வீசும் சில்லென்ற காற்று மற்றும் மிகவும் குறைவாகவே கிடைக்கும் சூரிய வெளிச்சம் போன்றவற்றால் குழந்தைகளுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் கடும் குளிர் காரணமாக உங்கள் குழந்தையின் மிகவும் மிருதுவான சர்மமும் பாதிப்புக்குள்ளாகும். இது போன்ற விஷயங்களால் குழந்தை நிம்மதியாகத் தூங்காமல் எப்போதும் அழுது கொண்டே இருப்பது, செரிமான கோளாறு ஏற்படுவது போன்ற சிக்கல்களை உண்டாக்கும்.

ஆகையால் இந்தக் குளிர்காலத்தில் உங்கள் குழந்தையின் உடல் மற்றும் சர்ம ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த 10 எண்ணெய்களால் மசாஜ் செய்யுங்கள். முதலில் இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போமா?

1. குழந்தையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்:

பொதுவாகவே குளிர்காலத்தில் நாம் குழந்தைக்கு சலி பிடித்து விடும் என்கிற பயத்தில் வெளியில் அழைத்துச் செல்ல மாட்டோம், வீட்டிலேயே அடைந்து இருப்பது குழந்தையை எரிச்சல் அடையச் செய்வதோடு குழந்தையை மந்தமாக்கும். அதனால் ஆயில் மசாஜ் அவர்களைக் குஷி படுத்துவதற்கான ஒரு நல்ல வழி ஆகும். இதனால் அவர்கள் எப்போதும் போல சுறுசுறுப்புடன் சிரித்து விளையாடுவார்கள்.

2. அவர்களின் தசை மற்றும் எலும்பு பிடிப்புகளை தளர்த்தும்:

குளிரில் கை, கால்கள் விறைத்துப் போவதால் தசை மற்றும் எலும்பு பிடிப்புகள் ஏற்படக் கூடும். ஆயில் மசாஜ் செய்யும் போது இந்த பிடிப்புகள் தளர்ந்து குழந்தையின் உடல் வலியைப் போக்கும். 

3. செரிமானத்தைச் சீர் செய்யும்:

குழந்தையின் வயிற்றுப் பகுதியில் சரியான முறையில் செய்யப்படும் மசாஜ் வயிற்று வலி அல்லது செரிமானக் கோளாறுகளை சரி செய்து நன்கு பசி எடுக்க வைக்கும்.

4. வெதுவெதுப்பாக வைத்திருக்கும்:

சுற்றுப்புற வெப்ப நிலை குறையும் போது குழந்தையின் உடலின் வெப்ப நிலையும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் மசாஜின் போது ஏற்படும் உராய்வால் உடல் சூடு அதிகரிக்கும்.

5. குழந்தை நிம்மதியாக உறங்கும்:

சுட தண்ணியில் தலைக்கு ஊத்திய நாட்களில் குழந்தை நன்கு அசந்து தூங்குவதை பார்த்திருப்பீர்கள். அதே போல் ஆயில் மசாஜ் செய்வதும் குழந்தைக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

எப்படி மசாஜ் செய்ய வேண்டும்?

  • இந்த 10 எண்ணெய்களில் உங்களுக்கு விருப்பமான எந்த எண்ணெய் வேண்டுமோ தேர்வு செய்து மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் உள்ளங்கையில் சில துளி எண்ணெய் வீட்டு இருக் கைகளையும் தேயுங்கள், இதனால் சூடு குழந்தையின் உடலில் பரவலாக பரவும்.
  • இப்போது குழந்தையில் உடலில் பொறுமையாக எண்ணெய்யைத் தடவி மசாஜை தொடங்குங்கள்.
  • மசாஜ் செய்யும் போது அதிகம் அழுத்தம் தர வேண்டிய அவசியம் இல்லை, மிகவும் மென்மையாக சில நேரங்களுக்கு ஒரே பகுதியில் மசாஜ் செய்யுங்கள்.
  • எண்ணெய் சிறிது நேரத்திற்குக் குழந்தையின் உடலிலேயே இருக்கட்டும், சில எண்ணெய்களை உடல் உரிந்து எடுத்துக்கொள்ளும், ஆனால் சில உடலின் மேல் அப்படியே இருக்கும், அதைப் போன்ற எண்ணெய்யை நீங்கள் தேர்வு செய்திருந்தால் சிறிது நேரம் கழித்து சோப் போட்டுக் கழுவி விடலாம்.
  • குழந்தையின் உடலில் எங்காவது தோல் தடிப்புகள் அல்லது புண்கள் இருந்தால் அங்கு மசாஜ் செய்ய தேவையில்லை, மேலும் குறிப்பாக நீங்கல் தேர்வு செய்த எண்ணெய் உங்கள் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும்.
  • குழந்தை தூங்கும் போது மசாஜ் செய்ய கூடாது, குழந்தையுடன் பேசி, சிரித்து, விளையாடிக் கொண்டே மசாஜ் செய்யுங்கள்.


எந்த 10 எண்ணெய்களில் மசாஜ் செய்யலாம்:

1. பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து பருவ கால மாற்றத்தால் குழந்தைக்கு சலி பிடிக்காமல் இருக்க வைப்பதோடு பாதாம் எண்ணெய்யின் மனம் குழந்தைகளை குஷி படுத்தும்.

2. கடுகு எண்ணெய்:

இந்தியாவின் வட பகுதி மக்களால் அதிகம் பயன்படுத்தப் படும் எண்ணெய் இது, இது குழந்தையின் உடலைக் குளிர்காலத்தில் நல்ல கதகதப்புடன் வைத்திருக்க உதவும். உணர்ச்சிகரமான (சென்சிடிவ்) சர்மம் உடையவர்களுக்கு இந்த எண்ணெய் எரிச்சலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது.

3. ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகப் படுத்தும் அதனாலேயே பொதுவாகவே மசாஜ் என்றாலே ஆலிவ் எண்ணெய் கண்டிப்பாக அதில் இடம் பிடித்து இருக்கும். உணர்ச்சிகரமான சர்மம் உள்ளவர்களும் கடுகு எண்ணெய்யை இதில் கலந்து மசாஜ் செய்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

4. டீ மர எண்ணெய்:

டீ மர எண்ணெய்யால் குழந்தைக்கு மசாஜ் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் குழந்தையின் சர்மத்தை மிருதுவாக்குவதுடன் குளிர்காலத்தில் எந்தவொரு ஒவ்வாமையும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

5. ஆமணுக்கு எண்ணெய்:

இது பிசு பிசுப்பு தன்மையுடைய எண்ணெய் என்பதால் குழந்தையின் வறண்டச் சர்மத்தை இது சரி செய்யும். இந்த எண்ணெய்யைக் குழந்தையின் தலை முடி மற்றும் நகத்திலும் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

6. சூரிய காந்தி எண்ணெய்:

சூரிய காந்தி எண்ணெய் எளிதாகக் குழந்தையின் உடல் உரிந்து எடுத்துக் கொள்ளும். இதில் வைட்டமின் ஈ சத்து மிகவும் அதிகமாக இருப்பதால் குழந்தையின் சர்ம ஊட்டச்சத்தை அதிகரிக்கும்.

7. எள் எண்ணெய்:

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப் படும் எண்ணெய் இது. குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் இதைக் கட்டாயம் பயன் படுத்துவார்கள் என்பதை மறக்க வேண்டாம். இந்த எண்ணெய்யில் மசாஜ் செய்வது குழந்தையின் ஆரோக்கியத்தை நிச்சயம் பாதுகாக்கும்.]

8. பசு நெய்:

பசு நெய்யில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ சத்து உள்ளது. ஆகையால் நெய்யால் குழந்தையின் உடலை மசாஜ் செய்தால் ரத்த ஓட்டத்தை அது சீர் படுத்தி குழந்தையை கத கதப்புடன் வைத்திருக்கும்.

9. தேங்காய் எண்ணெய்:

சர்மம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் என்றால் தெங்காய் எண்ணெய் இல்லாமல் இருக்குமா? இந்த எண்ணெய்யை உடல் எளிதாக உறிந்தெடுக்கும், மேலும் எந்த வித நோய் தொற்றில் இருந்தும் குழந்தையை இது பாதுகாக்கும்.

10. ஆயுர்வேத எண்ணெய்:

ஆயுர்வேத எண்ணெய்களால் குழந்தைக்கு மசாஜ் செய்தால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்தைத் தருவது மற்றும் சர்மத்தை மிகவும் மிருதுவாக மாற்றும்.

வரப்போகும் குளிர்காலத்தில் இந்த 10 எண்ணெய்களைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து அவர்களைக் குஷியாக வைத்திருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com