ஃபிட்னஸ்

சாப்பிட்ட பிறகு இதை செய்யவே செய்யாதீர்கள்! ஆய்வு முடிவு

20th Oct 2019 03:33 PM | Snehalatha

ADVERTISEMENT

 

உடற்பயிற்சி ஆர்வலர்களே, உங்களுக்காகத்தான் இந்தக் குறிப்பு. காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பாத் அண்ட் பர்மிங்காம் பல்கலைக்கழகங்கள் செய்த ஆய்வின்படி, நீங்கள் சாப்பிடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை மாற்றுவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது.

'காலை உணவுக்குப் பின் உடற்பயிற்சி செய்த ஆண்களை விட உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்கள் இரு மடங்கு அதிகமாக கொழுப்பை எரித்ததை நாங்கள் கண்டறிந்தோம்' என்று பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் ஜேவியர் கோன்சலஸ் கூறினார். 'நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது சாப்பிடும் நேரத்தை மாற்றுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன’ என்றும் கோன்சலஸ் கூறினார். 

ஆறு வார கால ஆய்வில், 30 ஆண்கள் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் என இரண்டு வகைப்படுத்தப்பட்டனர். இந்தக் குழுக்களின் ஒப்பீட்டு முடிவுகள் காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்கள் காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழுவை விட இருமடங்கு கொழுப்பை எரித்தனர் என்று கண்டறியப்பட்டனர்.

ADVERTISEMENT

இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்தபின் விடிந்ததும் உடற்பயிற்சிகள் செய்த போது இன்சுலின் அளவு குறைவாக இருப்பதினால் கொழுப்புப் பயன்பாடு அதிகரிப்பதாக அவர்கள் கண்டறிந்தனர், அதாவது கொழுப்பு திசுக்களில் இருந்து கொழுப்பை அதிகமாகவும், தசைகளுக்குள் இருக்கும் கொழுப்பை எரிபொருளாகவும் பயன்படுத்துகிறது. இது ஆறு வாரங்களுக்கு மேலாக எடை இழப்புக்கு எந்த மாற்றத்துக்கு வழிவகுக்கவில்லை என்றாலும், இது அவர்களின் உடல்நிலையில் 'ஆழமான மற்றும் நேர்மறையான 'விளைவுகளை ஏற்படுத்தியது, காரணம் அவர்களின் உடல்கள் இன்சுலின் சுரப்புக்கு வழிவகுக்க முடிந்தது. சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் பயிற்சி செய்த தனிநபர்களுக்கான தசைகளில் கொழுப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி குழு கவனம் செலுத்த விரும்பியது. ஆறு வார சோதனையில், ஒரே மாதிரியான பயிற்சிகள் மற்றும் உணவு உட்கொள்ளல் இருந்த போதிலும், காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழுவோடு ஒப்பிடும்போது, ​​காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்த குழுவின் தசைகள் இன்சுலின் சுரப்பி வித்யாசம் இருந்தது என்பதை ஆராய்ச்சி குழு கண்டறிந்தது. காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்களின் தசைகள் உடலுக்குத் தேவையான முக்கியமான புரதங்களில் அதிக அளவினைக் காட்டின. காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழு உண்மையில் முந்தய குழுவை விட சிறந்தது அல்ல என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT