கிங் கான் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். பாலிவுட்டிலிருந்து சென்னை எக்ஸ்ப்ரஸ் பிடித்து கோலிவுட் தரையிறங்கிய இந்த 50 வயது நடிகருக்கு உலகளாவிய ரசிகர் கூட்டம் உண்டு. இவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் மற்றும் எனர்ஜி மட்டுமே அவரை அனைத்து சென்ட்ரலும் ரசிக்க வைத்துள்ளது. எனக்குத் தெரிந்தது எல்லாம் காலையில எழுந்ததும், ஷூட்டிங் செல்ல தயாராகி, கார்ல எஃப் எம் சானல் எதையாவது கேட்டுக்கிட்டே செட்டுக்கு போறது தான். இனிமே நடிப்பு கிடையாது அப்படிங்கற நிலைமை வந்துச்சுன்னா நான் என்ன ஆவேன்னு எனக்கேத் தெரியாது. என் வேலை தான் எனக்கு உயிர் மூச்சு என்று சொல்லும் வொர்க் ஹாலிக் ஷாரூக்கின் ஹெல்த் ஸ்கேன் இங்கே....
வொர்க் அவுட் ரெகுலராக செய்பவர். தினமும் 100 புஷ் அப்ஸ் மற்றும் 60 புல் அப்களை செய்துமுடித்துவிடுவார். எந்த படத்துக்கு எப்படிப்பட்ட லுக் தேவையோ அதற்காக சிரத்தை எடுப்பவர். ஓம் ஷாந்தி ஓம் என்ற படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்தவர்.
உடற்பயிற்சியை தீவிரமாக நம்புபவர். வாரத்தில் நான்கு நாட்கள் ஆப்ஸ்க்கான பயிற்சிகள் செய்தால் போதும், அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து விட்டு கடைசி ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால். உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். தினமும் ஆப்ஸ் பயிற்சி செய்தால் தசைகள் காயமடையலாம் என்று சொல்வார். ஸ்ட்ரென் த் ட்ரெயினிங் வொர்க் அவுட்ஸ், மற்றும் வெயிட் லிப்ட் செய்வது நல்லது, அது தசைகளுக்கு அடிவயிற்றுக்கும் வலுடையவைக்கும் என்று ஃபிட்னெஸ் மந்த்ரா சொல்பவர்.
டயட்டில் கோட்டை விட்டு நிறைய சாப்பிட்டு காலரிகளை அதிகரித்துக் கொண்டால் கவலை வேண்டாம், வியர்க்க விறுவிறுக்க 50 நிமிடங்கள் கார்டியோ செய்தால் அதிகர் சேர்ந்துவிட்ட கொழுப்பை கரைத்துவிடலாம் என்பார்.
தினமும் 30 லிருந்து 60 நிமிடம் வரை ரன்னிங், ஜாகிங், சைக்ளிங் அல்லது ஏராபிக்ஸ் தினமும் செய்ய வேண்டும் என்று சொல்வது மட்டுமில்லாமல் ரெகுலராக கடைப்பிடிப்பவர் அவர்.
டயட் பொருத்தவரை அரிசி, ப்ரெட், மசாலா உணவு வகைகள், எண்ணெய் நெய் தின்பண்டங்கள், போன்றவற்றை சுத்தமாக தவிர்த்துவிட்டார். சிக்கன், டர்க்கி, முட்டை வெள்ளைக்கரு, பன்னீர், மீன் உணவுகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வார். தானியங்கள். காய்கறிகள், பழங்கள், கட்டாயம் உணவில் இருக்கும் டயட்டை எடுத்துக் கொள்வார். ஸ்வீட் சாப்பிட ஆசையாக இருந்தால், கட்டுப்படுத்திக் கொண்டு பிடித்த பழத்துண்டை சாப்பிடுவார். தினமும் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீரைக் கட்டாயம் குடித்துவிடுவார். வொர்க் அவுட் முடிந்தவுடன் ப்ரோட்டீன் ட்ரிங்க் அருந்துவார். உடலின் மீது அக்கறை செலுத்துபவர்கள் கட்டாயம் சிகரெட் மற்றும் ஆல்கஹால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வார். சிகரெட்டை வெகுவாக குறைத்துவிட்டார்.
கால் முட்டியில் சர்ஜரி, முதுகுத் தண்டில் காயம், தோலில் பிரச்னை என்று தொடர்ந்து விபத்துகளில் சிக்கினாலும் மனம் தளராமல் சரி செய்து கொண்டு மீண்டும் அதே உற்சாகத்துடன் களத்தில் இறங்குவார். சென்னை எக்ஸ்ப்ரஸ் ஷூட்டிங் கடைசி ஷெட்யூலின் போது தோள் பட்டை சிகிச்சை எடுத்து முடித்து டாக்டர்கள் பத்து நாள் பெட் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொன்னதையும் மீறி தீபிகாவுடன் க்ளைமாக்ஸ் டான்ஸ் ஆடி, டப்பிங் பேசி என தினமும் இரவு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கியவர்.
மனதை லேசாக இசை மற்றும் குடும்பத்துடன் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்கிறார். சர்ச்சைகளில் சிக்கினாலும் கலங்காதவர். வாடகைத் தாய் மூலம் தன் மூன்றாவது மகனை பெற்ற போது எழுந்த சர்ச்சைகளுக்கு தெளிவாக பதில் சொல்லியவர்.
செய்யும் தொழிலுக்கு உரிய மரியாதையை தந்துவிடுங்கள், இரவு பகல் பார்க்காமல் எடுத்துக் கொண்ட வேலைக்கு நூறு சதவிகிதம் நேர்மையாக உழைத்தால் யாருமே சூப்பர் ஸ்டார் தான் என்று தன்னடகத்துடன் சொல்கிறார் இந்த நட்சத்திர நடிகர்.