மருத்துவம்

இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலிமையை உண்டாக்க உதவும் கசாயம்

25th Feb 2020 12:26 PM | - கோவை பாலா 

ADVERTISEMENT

 

 

இரத்தத்தை சுத்தப்படுத்தி வலிமையை தரும் பொடுதலைக் கீரை கடுக்காய் கசாயத்தை தினமும் பயன்படுத்தி பலன்பெறுங்கள். 

தேவையான பொருட்கள்

பொடுதலைக் கீரை       -  ஒரு கைப்பிடி

கடுக்காய்               -  1

நெல்லிக் கனி       -  1

தான்றிக்காய்       -  1


செய்முறை

முதலில் பொடுதலைக் கீரை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.

கடுக்காய் , தான்றிக்காய் , நெல்லிக்காய் ஆகியவற்றை கொட்டைகளை நீக்கி நன்கு தட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள பொடுதலைக் கீரை  மற்றும்  தட்டிவைத்துள்ள கடுக்காய் , தான்றிக்காய் , நெல்லிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக  கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

ADVERTISEMENT

இந்தக் கசாயம் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடம்பிற்கு வலிமையை உண்டாக்க உதவும்  கசாய்ம்.

தினமும் காலை  வேளையில்  இந்தக் கசாயத்தை தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் நன்கு பலனைப்  பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609  
Covaibala15@gmail.com  
 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT