கோலாகலமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு - புகைப்படங்கள்
28th May 2023 06:27 PM
ADVERTISEMENT
1 / 18
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அருகில் சபாநாயகர் ஓம் பிர்லா.
2 / 18
வேத மந்திரங்கள் முழுங்க, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர்.
ADVERTISEMENT
3 / 18
தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்டோர்களிடம் ஆசி பெறும் பிரதமர் நரேந்திர மோடி.
4 / 18
வேத மந்திரங்கள் ஓத, வாத்தியங்கள் முழங்க, பெருமை மிகு செங்கோலை பக்தியுடன் நாடாளுமன்ற கட்டடத்திற்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடி.
ADVERTISEMENT
5 / 18
தேவாரம் பாட பூஜையுடன் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடங்கியது. தமிழகத்தின் ஆதினங்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர்.
6 / 18
மங்கள இசை இசைக்க புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குத்து விளக்கை ஏற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
ADVERTISEMENT
7 / 18
புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் செல்லும் பிரதமர் மோடி.
8 / 18
புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற கட்டடத்திற்கு செல்லும் பிரதமர் மோடி.
9 / 18
செங்கோலை கைகளில் ஏந்தியவாறு சென்ற பிரதமர் மோடி, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார்.
10 / 18
மங்கள இசை இசைக்க செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. அருகில் சபாநாயகர் ஓம் பிர்லா.
11 / 18
புதிய நாடாளுமன்ற கட்டிடடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா.
12 / 18
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்.
13 / 18
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவை அறைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் சபாநாயகர் ஓம் பிர்லா.
14 / 18
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் உறுப்பினர்கள்.
15 / 18
மக்களவை அறைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுந்து நின்று வரவேற்பு அளித்த மக்களவை உறுப்பினர்கள்.
16 / 18
இருக்கையில் மக்களவையில் உறுப்பினர்கள்.
17 / 18
புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் நான்கு மாடி கட்டிடமாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் மக்களவையில் உறுப்பினர்களும் 888 பேரும், மாநிலங்களவையில் 300 பேர் அமர முடியும்.
18 / 18
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி ரூபாய் 75 நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.