செய்திகள்

நொய்டா இரட்டைக் கோபுரம் தகர்ப்பு - புகைப்படங்கள்

DIN
விதிமீறிக் கட்டப்பட்ட இரட்டை கோபுரங்கள்.
விதிமீறிக் கட்டப்பட்ட இரட்டை கோபுரங்கள்.
நொய்டா இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கான பணி எடிஃபிஸ் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
3,700 கிலோ வெடிபொருட்களை கட்டிடத்தின் தூண்களில் நிரப்பும் பணிகள் முடிவடைந்து 'வாட்டர் ஃபால் இம்ப்ளோஷன்' என்ற தொழில்நுட்பம் மூலம் கட்டடம் தகர்க்கப்பட்டது.
கட்டடம் இடிப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு கவுன்டன் தொடங்கிய நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் கட்டடம் முழுவதும் இடிக்கப்பட்டது.
இரட்டை கோபுரங்கள் அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல், கதவு, தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
100 மீட்டர் உயரம் கொண்ட ஏபெக்ஸ் கட்டிடம், 97 மீட்டர் உயரம் கொண்ட சியேன் கட்டடம் தகர்க்கப்பட்ட காட்சியை பலர் நேரில் பார்த்தனர்.
சரியாக 9 நொடிகளில் கட்டடம் முற்றிலும் தகர்க்கப்பட்டது.
கட்டடம் தரைமட்டம் ஆனாலும், அதில் இருந்து வெளியேறும் புழுதிப் படலம் முழுவதுமாக அடங்க சிறிது நிமிடங்கள் ஆயின.
தரைமட்டமான இரட்டை கோபுரம்.
கட்டிடத்தின் அருகில் வசிப்போர் வீடுகளில் உள்ள மின் இணைப்பு, கியாஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது.
கட்டடங்களை இடிப்பதால் ஏற்படவுள்ள தூசுப்படலத்தைக் கருத்தில்கொண்டு, அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT