22 செப்டம்பர் 2019

காணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்! தேர்தல்களும், பிரதமர்களும்!

DIN | Published: 21st May 2019 03:08 PM
இந்தியாவின் முதல் பிரதமர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜவாஹர்லால் நேரு. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியப் பிரதமராக பதவியேற்ற நேரு, 1964ம் ஆண்டு அவர் உயிரோடு இருந்த வரை பிரதமராக இருந்தார்.
நேரு மரணம் அடைந்ததை அடுத்து 1964ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு வரை இடைக்கால பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் குல்சாரிலால் நந்தா.
நேருவைத் தொடர்ந்து 1964ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 19 மாத காலம் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து 1966ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையோடு நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமரானார்.
1977 ஆம் ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவர், மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரசு அல்லாத பிரதமராக பதவியேற்றார்.
1984ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
1989ஆம் ஆண்டு இந்தியாவின் 7வது பிரதமராக தேசிய முன்னணியின் தலைவர் வி.பி. சிங் பதவியேற்றார். தேவிலால் துணைப் பிரதமராக பதவியேற்றார்.
1998ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் 12வது நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகி அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரானார்.
1997 ல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கிய ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டது. அதன்படி புதிய தலைமையின் கீழ் 1997 ஏப்ரல் 21 ல் குஜ்ரால் பிரதமராக பதவியேற்றார்.
ஜனதா தளத்தில் பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) உருவாக்கிய சந்திரசேகர் 1990 நவம்பர் 10ல் எட்டாவது இந்திய பிரதமர் ஆனார்.
1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நரசிம்ம ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, நரசிம்ம ராவ் பிரதமரானார்.
1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து, பாஜக ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஐக்கிய முன்னணியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து இந்தியாவின் 14வது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார் தேவே கௌட
2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.
மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது, 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கிடையிலான பத்தாண்டு காலம் ஆட்சி
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இந்த அரசே காங்கிரஸ் அல்லாத முதல் தனித்த பெரும்பான்மை பெற்ற கட்சியின் அரசாகும்.

இந்தியாவை ஆண்டு பிரதமர்களின் பதவியேற்பு விழா புகைப்படங்கள்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்!
போர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்
பூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்
மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி பஞ்சலோக நடராஜர் சிலை
மதராஸப்பட்டினம் உணவுத் திருவிழா