பசுமஞ்சள் நிறத்தைக் கொண்ட புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த ரூபாய் நோட்டு, 129 மி.மீ. நீளமும், 63 மி.மீ. அகலமும் கொண்டதாக இருக்கும். தற்போது புழக்கத்திலிருக்கும் சிவப்பு-ஆரஞ்சு நிற 20 ரூபாய் நோட்டின் நீளம் 143 மி.மீ.யாகவும், அகலம் 63 மி.மீ.யாகவும் உள்ளது. பழைய ரூபாய் நோட்டில், அந்தமான் தீவிலுள்ள ஹாரியட் மலைப் பகுதி இடம் பெற்றுள்ள நிலையில், புதிதாக அறிமுகமாகவிருக்கும் 20 ரூபாய் நோட்டில் எல்லோரா மலைக் குகை இடம் பெற்றுள்ளது.