புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
2 / 14
கட்டுமானத்துக்கு 26 ஆயிரம் டன் எஃகும மற்றும் 63 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
3 / 14
தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானதும், இதில் எம்.பி.க்கள் அமர போதிய இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 / 14
பழைய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டபோது, பாதாள சாக்கடை, குளிரூட்டும் வசதி, தீ பாதுகாப்பு, சிசிடிவி ஆகியவை கவனத்தில் எடுக்கப்படவில்லை என அரசு கூறுகிறது.
ADVERTISEMENT
5 / 14
புதிய நாடாளுமன்ற கட்டடம் தேசிய பறவையான மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
6 / 14
பழைய மக்களவையில் அதிகபட்சமாக 552 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், புதிய அவையில் 888 இருக்கைகள் உள்ளன.
ADVERTISEMENT
7 / 14
பழைய மாநிலங்களவை கட்டடத்தில் 250 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும் நிலையில், புதிய அவையில் 384 பேர் அமர முடியும்.
8 / 14
நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின் போது 1,272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.
9 / 14
எம்.பி.க்கள் அமர பெரிய அறை, நூலகம், சாப்பாட்டு அறைகள் மற்றும் அதிகப்படியான பார்க்கிங் வசதிகள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும்.
10 / 14
புதிய நாடாளுமன்ற திட்டத்தின் கட்டுமானப் பகுதி 64,500 சதுர மீட்டர் ஆகும்.
11 / 14
புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
12 / 14
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்ட போது, நில அதிர்வு மண்டலம் 2ல் தில்லி இருந்தது. ஆனால் தற்போது நான்காம் நிலையை தில்லி எட்டியுள்ளது.
13 / 14
நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
14 / 14
தில்லியை இணைக்கும் பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிகளில் பல அடுக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.