இராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்

நவம் என்றால் ஒன்பது. நவகைலாயம் என்றால், ஒன்பது கிரகங்கள் மூலம் அமையப்பெற்ற ஒன்பது சிவாலயங்கள். இது கிரக ஆலயமல்ல, நவக்கிரக சிவாலயம். இராஜபதி கைலாசநாதரை, கேது வந்து வணங்கினான். இராஜபதிக்கு வந்து செளந்தர்யநாயகி சமேத கைலாசநாதரை வணங்கினால் கேதுவின் தாக்கம் குறையும். இதுபோலதான், ஒவ்வொரு கிரகத் தாக்கத்தையும் ஒழிக்க வல்லதான அமைந்தது இந்த நவகைலாய ஆலயம். தோஷங்களை விலக்கி வைக்கும் அதிகாரம் சிலவானதை, சிவபெருமான் நவக்கிரங்கங்களுக்கு அளித்து அருளச் செய்ய பணித்துள்ளார். இந்த நவகைலாயத் திருத்தலம் ஒன்பதில் எட்டு தாமிரபரணி நதிக்கரையோரமாவும், இராஜபதி ஆலயத் தலம் ஒன்று மட்டும் நதியின் மிக அருகேயே அமையப் பெற்றன. ஜூன் மாதம் 14-ஆம் தேதி இவ் ஆலயத்தின் ஏழுநிலை இராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷேம் நடைபெற்றது. படங்கள் உதவி: கோவை. கு. கருப்பசாமி - 9994643516
இராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com