வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

கோலாகலமாக துவங்கியது ஸ்ரீ அத்தி வரதர் தரிசனம்

DIN | Published: 02nd July 2019 11:58 AM

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம், கோலாகலமாக துவங்கியது. குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரத பெருமாளுக்கு ஜல சம்ப்ரோக்‌ஷணம், புண்ணியாவதன ஹோமம் ஆகியவை நேற்று நடத்தப்பட்டது. ஸ்ரீ அத்தி வரதர், பக்தர்கள் தரிசிக்கும் வகையில் திருக்கோயிலின் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஸ்ரீ அத்தி வரத பெருமாள் 48 நாட்கள் அருள்பாலிக்க உள்ளார். ஜூலை 1 முதல் முதல் 23 வரை சயன கோலத்திலும், ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 17 வரை 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தர உள்ளார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று அதிகாலை முதல் வரிசையில் நின்று, கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய, அத்தி வரதரை தரிசித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைபவம் ஸ்ரீ அத்தி வரதர் அத்தி மரம் சயன கோலம் நின்ற கோலம் ஸ்ரீ அத்தி வரத பெருமாள் வசந்த மண்டபம்

More from the section

அத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII
தினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி IV