திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி II

DIN | Published: 13th August 2019 10:47 PM
புஷ்ப அங்கியும், பச்சை நிறப் பட்டாடையும் அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்.
43-ஆவது நாளான திங்கள்கிழமை மஞ்சள் நிறப் பட்டாடை, பச்சை நிற அங்கவஸ்திரம் அணிந்து காட்சியளித்த அத்திவரதர்.
42-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சாம்பல் நிறப் பட்டாடை, ஊதா நிற அங்கவஸ்திரம் அணிந்து அருள்பாலித்த அத்திவரதர். (உள்படம்) பழ வகைகளால் செய்யப்பட்ட அத்திவரதர் கிரீடம்.
41-ஆவது நாளான சனிக்கிழமை வெண்ணிற பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதர்.
40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கனகாம்பர நிறப் பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதர்.
39-ஆவது நாளான வியாழக்கிழமை மலர் அலங்காரத்தில் ஆண்டாள் கிளிகளுடன் அருள்பாலித்த அத்திவரதர். (வலது) நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
38-ஆவது நாளான புதன்கிழமை ஊதா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.
37-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை வெண்பட்டு அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்.

காஞ்சிபுரத்தில் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். தற்போது வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் தரிசனம் அளித்து வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII
தினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி IV