சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்

DIN | Published: 19th April 2019 06:31 PM

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து 9ஆம் தேதி தங்க சப்பர வாகனம், பூத, அன்ன வாகனம், என் தொடா்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் இறைவன் எழுந்திருளினாா். இதனை தொடர்ந்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் 17ஆம் தேதி நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி சுந்தா்ராஜ பெருமாள கள்ளழகா் பெருமான் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழுங்க, பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கினாா். ஆற்றில் இறங்கிய அழகர் மீது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்து பரவசம் அடைந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : பச்சை பட்டு வைகை ஆறு கள்ளழகா்

More from the section

கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
விநாயகர் சதுர்த்தி - பகுதி II
விநாயகர் சதுர்த்தி - பகுதி I
விநாயகர் சதுர்த்தி விழா - அலைமோதிய கூட்டம்
அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா