தேசியச் செய்திகள்

அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்: மாயாவதி புத்தாண்டு வாழ்த்து

1st Jan 2020 11:28 AM

ADVERTISEMENT

 

அனைத்து மதங்களையும் மதித்து நடக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 2020 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மாயாவதி கூறியதாவது,

சில அரசியல் கட்சிகள் சுயநலத்துடன் செயல்படுகின்றன. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. அனைத்து மதங்களையும் நாம் மதித்து நடக்க வேண்டும். நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும்.

பாஜக-வின் வகுப்புவாத மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட சிந்தனைகளால், 2019-ஆம் ஆண்டு பெரும்பாலான அரசியலமைப்பின் கொள்கைகள் பலவீனப்படுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT