பாஜக எம்.எல்.ஏ.,வை காலணியால் தாக்கிய அக்கட்சியின் எம்.பி., (விடியோ உள்ளே)

​பாஜக எம்.எல்.ஏ.,வை அக்கட்சியின் எம்.பி., காலணியால் தாக்கிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பாஜக எம்.எல்.ஏ.,வை காலணியால் தாக்கிய அக்கட்சியின் எம்.பி., (விடியோ உள்ளே)


பாஜக எம்.எல்.ஏ.,வை அக்கட்சியின் எம்.பி., காலணியால் தாக்கிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக உயர் அதிகாரிகளால் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் உத்தரப் பிரதேச அமைச்சர் அஷூடோஷ் தாண்டன், சந்த் கபீர் நகர் பாஜக எம்பி சரத் திரிபாதி, அந்த மாவட்டத்தில் உள்ள மென்தாவல் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராகேஷ் பாகெல் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது, உள்ளூரில் போடப்பட்ட சாலையின் அடிக்கல்லில் தனது பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்று திரிபாதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ராகேஷ் பாகெல் அது என்னுடைய முடிவு என்று பதில் அளித்துள்ளார். 

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த திரிபாதி தனது காலணியை எடுத்து பாகெலை சரமாரியாக தாக்கினார். இதைத்தொடர்ந்து, பாகெல் தனது இருக்கையில் இருந்து எழுந்து போய் திரிபாதியை பதிலுக்கு சரமாரியாக தாக்கினார். 

பின்னர், அங்கிருந்த அதிகாரிகள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஊடகவியலாளர்களும் இருந்ததால் இந்த நிகழ்வு முழுவதும் பதிவாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளான பாஜகவைச் சேர்ந்த இவர்களது சண்டை அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. இருவரது இந்த ஒழுக்கமற்ற நடவடிக்கைக்கு அம்மாநில பாஜக தலைமை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com