அரசுப் பணிகள்

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை வேண்டுமா?

14th Sep 2023 12:58 PM

ADVERTISEMENT


வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில்  நிரப்பப்பட உள்ள 450 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Reserve Bank of India

பதவி: உதவியாளர்(Assistant)

காலியிடங்கள்: 450

ADVERTISEMENT

தகுதி: 1.9.2023 தேதியின்படி, ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.9.2023 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகை குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்து தெரிந்துகொள்ளவும். 

சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.20,700 -55,700

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

முதல்நிலைத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்

முதன்மைத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 + 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினரும்  ரூ.450 + 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.10.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT