அரசுப் பணிகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தோ்வு எப்போது? 

2nd Sep 2023 01:29 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) தேர்வு செய்து வருகிறது. 

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என அரசு தேர்வுக்காக தயாராகி வருபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

அந்த வகையில் நடப்பு ஆண்டில் மீதமுள்ள குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ஒவ்வொரு முறை குரூப் 4 தோ்வு நடைபெறும் போதும் சில ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு பல லட்சக்கணக்கானவா்கள் போட்டித் தோ்வை எழுதி வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 காலி பணியிடங்களை தற்போது உள்ள சூழ்நிலைக்கு தக்கபடி அதிகரித்து அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதற்கு தோ்வில் வெற்றி பெற்றவா்களை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ரிசா்வ் செய்து வைத்து உடனுக்குடன் காலிப்பணியிடம் உருவாகிய உடனே அதை நிரப்புவதற்கு உண்டான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அரசு முன்வரவேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. 

அந்த வகையில் குரூப் 4 பதவிக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பது உறுதியாத நிலையில், லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பும் வரும் நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான எழுத்துத் தேர்வு 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என தெரிகிறது.

மேலும் இந்த மாதத்தில் 384 ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கும், அக்டோபர் மாதம் 400 தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள் என 13 வகையான துறைசார்ந்த காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT