அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் 3,000 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

18th Nov 2023 02:55 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,000 உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் வெள்ளிக்கிழமை(டிச.1) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள சுமார் 3,000 உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் செயலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் வெள்ளிக்கிழமை(டிச.1) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் 1.7.2023 அன்றுள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

இந்த பணிக்கு தேர்வு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசாணைப்படி இட ஒதுக்கீடு, இனச் சுழற்சி, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? | ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.11,000 - ரூ.45,100, இளநிலை உதவியாளர் பதிவிக்கு மாதம் ரூ.10,000 - ரூ.42,500,  செயலாளர் பதவிக்கு ரூ.15,000 - 47,600 வழங்கப்படும். தெளிவான விவங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250. இதர பிரிவை சார்ந்தவர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு இணையதளத்தில் (District Recruitment Bureau cooperative department) சென்று விண்ணப்பிக்க வேண்டும். உதராணமாக https://www.drbchn.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் 1.12.2023 தேதி மாலை 5.45 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும், வினாக்கள் கொள்குறி வகையில் 170 மதிப்பெண்களுக்கு 200 வினாக்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு 24.12.2023 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல், விவரங்களுக்கு https://www.drbchn.in இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT