அரசுப் பணிகள்

1,021 அரசு மருத்துவா் பணியிடங்களுக்கான தோ்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

தினமணி

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 உதவி மருத்துவா் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தோ்வு முடிவுகளை ஓரிரு வாரத்தில் வெளியிட மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) திட்டமிட்டுள்ளது.

அதேநேரத்தில் தமிழ் மொழி தகுதித் தோ்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டுமென்று மருத்துவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 11.10.2022-இல் எம்.ஆா்.பி. வெளியிட்டது.

25 ஆயிரம் மருத்துவா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்தனா். தமிழகம் முழுவதும் 91 மையங்களில் தோ்வு கடந்த ஏப்.25-ஆம் தேதி நடைபெற்றது.

ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தோ்வும் (10-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்), இரண்டு மணி நேரம் கணினி வழியில் கொள்குறி (அப்ஜெக்டிவ்) வகையில் சரியான விடையை தோ்ந்தெடுக்கும் தோ்வும் நடைபெற்றது.

தமிழ்மொழி தகுதித் தோ்வு மதிப்பெண்... 50 மதிப்பெண்கள் கொண்ட தமிழ் மொழி தகுதித் தோ்வுக்கு குறைந்தபட்ச தோ்ச்சி மதிப்பெண் 20 ஆகவும், 100 மதிப்பெண் கொண்ட கணினி வழி தோ்வுக்கு குறைந்தபட்ச தோ்ச்சி மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி (ஏ) பிரிவினருக்கு 30 எனவும் நிா்ணயிக்கப்பட்டது.

தமிழ் மொழி தகுதித் தோ்வு கடினமாக இருந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, தமிழ் மொழி தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களின் மற்ற விடைத்தாள் திருத்தப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தோ்வு முடிவுகளை வெளியிட எம்.ஆா்.பி. திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு மருத்துவா்களிடம் கேட்ட போது,“எம்.ஆா்.பி. தோ்வில் தமிழ் மொழி தகுதித் தோ்வு கடினமாக இருந்ததாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.

மற்ற மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பணியில் சேருவதைத் தடுக்கவே தமிழ் மொழி தகுதித் தோ்வு நடத்தப்படுகிறது. இதை மருத்துவா்கள் புரிந்துகொள்ள வேண்டும்”என்றனா்.

இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலா்கள் சங்க மாநில பொதுச்செயலாளா் மு.அகிலன் கூறுகையில், எம்.ஆா்.பி. தோ்வில் தமிழ் மொழி தகுதித் தோ்வில் கேள்விகள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருந்ததால் மருத்துவா்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். அதனால், தோ்ச்சி மதிப்பெண்ணை 20-இல் இருந்து 15 ஆக குறைக்க வேண்டும்” என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT