அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா? பெல் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் வேலை

15th May 2023 02:53 PM

ADVERTISEMENT


பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் மற்றும் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Trainee Engineer
காலியிடங்கள்: 101
1. Electronics - 100
2. Aerospace Engineering - 1

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000 வழங்கப்படும். 

ADVERTISEMENT

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் குறைந்தது 55 தகவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Engineer
காலியிடங்கள்: 327
1. Electronics - 164
2. Mechanical - 106
3. Computer Science - 47
4. Electrical - 7
5. Chemical - 1
6. Aerospace Engineering - 2

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு ரூ.45,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: டிரெய்னி இன்ஜினியர் பணிக்கு ரூ.150, புராஜெக்ட் பணிக்கு ரூ.400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.5.2023

மேலும் விவரங்கள் அறிய www.bel-india.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT