அரசுப் பணிகள்

தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா? தடய அறிவியல் துறையில் 31 காலியிடங்கள் அறிவிப்பு!

தினமணி


தமிழ்நாடு அரசின் தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதிவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கு மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பணி: இளநிலை அறிவியல் அலுவலர்

காலியிடங்கள்: 31

துறைவாரியான காலியிடங்கள்: 
1. வேதியியல் - 20
2. உயிரியல் - 4
3. இயற்பியல் - 3
4. இயற்பியல் மற்றும் வேதியியல்(கணினி தடவியல் அறிவியல்) - 4

சம்பளம்: மாதம் ரு.36,900 - 1,35,100

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்கள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வுடன் அமைந்த வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வுக் கட்டணம் ரூ.150. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டண சலுகைகள் குறித்த விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.5.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT