அரசுப் பணிகள்

காவல் உதவி ஆய்வாளா் பணி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தினமணி


தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட 621 காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 621

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Sub-Inspector pf Police Taluk
காலியிடங்கள்: 366

பணி: Sub-Inspector of Police AR
காலியிடங்கள்: 145

பணி: Sub-Inspector of Police TSP
காலியிடங்கள்: 110

சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினர் 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி,டிஎன்சி) 32 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர் (எஸ்சி), அருந்ததியர் (எஸ்சி(ஏ)), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும்
திருநங்கைகள் பிரிவினர் 35 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவை பிரிவினர் 37 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர், மத்திய ஆயுதப்படையின் முன்னாள் பணியாளர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான தேர்வு நுழைச்சீட்டை விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தபால் வழியில் தேர்வு நுழைச்சீட்டுகள் வழங்கப்படாது.

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் திறந்த ஒதுக்கீடு மற்றும் துறை ஒதுக்கீட்டுத் தேர்வுகள் இரண்டிற்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 1.6.2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.6.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT