அரசுப் பணிகள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் 332 லேப் டெக்னீஷியன் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

29th Jun 2023 01:00 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகயுள்ள 332 லேப் டெக்னீஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படயுள்ளனர். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூலை 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். 

பணி: லேப் டெக்னீஷியன் (Grade-III)

காலியிடங்கள்: 332

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.13,000

வயது வரம்பு: 1.7.2023  தேதியின் படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் பொது, மாற்றுதிறனாளிகள் பிரிவினர் 42 வயதிற்குள்ளும், முன்னால் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் லேப் டெக்னீஷியன் பிரிவில் குறைந்தது ஒரு ஆண்டு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 10, பிளஸ் 2, லேப் டெக்னீஷியன் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2.7.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT