அரசுப் பணிகள்

தமிழ்நாடு காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 

22nd Jun 2023 12:53 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு காவல்துறையில் நிரப்பப்பட உள்ள 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 750

பணி: SI of Police (Taluk) - 366
பணி: SI of Police (AR) - 145
பணி: SI of Police (TSP) - 110
பணி: Station Officer - 129. இதில் 191 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின் அடிப்படையில் 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT