அரசுப் பணிகள்

இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா?

22nd Jun 2023 12:29 PM

ADVERTISEMENT


இந்திய விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் காலியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங் 11, கிரவுண்ட் டியூட்டி 265 (டெக்னிக்கல் 151, நான் டெக்னிக்கல் 114) என மொத்தம் 276 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளையிங் பிரிவுக்கு குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். 

கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவுக்கு பொறியியல் துறையில் பட்டம். நான் டெக்னிக்கல் பிரிவுக்கு ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

வயது வரம்பு: 1.7.2024 தேதியின்படி பிளையிங் பிரிவுக்கு 20 - 24 வயதிற்குள்ளும், கிரவுண்ட் டியூட்டி பிரிவிக்கு 20 - 26 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 30.6.2023

மேலும் விவரங்கள் அறிய  afcat.cdac.in/AFCAT என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT