அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

10th Jun 2023 12:38 PM

ADVERTISEMENT


இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 12,828 கிராமின் டாக் சேவக் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள் (ஜூன் 11) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12,828. தமிழ்நாட்டில் 18 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணி: Gramin Dak Sevaks
1. Branch post Master
2. Assistant Branch Post Master)

தகுதி: மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட மாநிலங்களில் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

சம்பளம்:  BPM பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000-29,380 வழங்கப்படும்.  ABPM பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10,000 -24,470 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 11.6.2023 தேதியின்படி, 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து வயதுவரம்பு சலுகைகளை தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தவும். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விகிதங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indiapostgdsonline.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.6.2023

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT