அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 8812 வங்கி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

2nd Jun 2023 11:49 AM

ADVERTISEMENT

 

பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 8812 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூன் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS)

பணிகள்: Office Assistant, Officer Scale-I, Officer Scale II, Officer Scale III

ADVERTISEMENT

காலியிடங்கள்: 8812

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Office Assistant(Multipurpose) - 5538
பணி: Officer Scale-I (Assistant Manager) - 2685
பணி: Officer Scale-II(Agriculture Officer) - 60
பணி: Officer Scale-II(Marketing Officer) - 3
பணி: Officer Scale-II(Treasury Manager) - 8
பணி: Officer Scale-II(Law) - 24
பணி: Officer Scale-II(CA) - 21
பணி: Officer Scale-II(IT) 68
பணி: Officer Scale-II(General Banking Officer) - 332
பணி: Officer Scale-III - 73

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை, எம்பிஏ(சந்தையியல்), சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 
Officer Scale-III பணியிடங்களுக்கு 21 முதல் 40க்குள்ளும், Officer Scale-II பணியிடங்களுக்கு 21 முதல் 32க்குள்ளும், Officer Scale-I பணியிடங்களுக்கு 18 முதல் 30க்குள்ளும், Office Assistant பணியிடங்களுக்கு 18 முதல் 28க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.850, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.175. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.6.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT