அரசுப் பணிகள்

தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

2nd Jun 2023 12:30 PM

ADVERTISEMENT


ஒருங்கிணைந்த உதவி நிலவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கான கணினிவழித்தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்  வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணி: உதவி நிலவியலாளர் (நீர்வளத் துணைன் நிலத்தடி நீர் பிரிவு)
காலியிடங்கள்: 11
தகுதி: புவியியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் அல்லது பயன்பாட்டு புவியியலில் முதுகலை அறிவியல் பட்டம் அல்லது முதுகலை அறிவியல் (தொழில்நுட்பம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவி நிலவியலாளர் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை)
காலியிடங்கள்: 29
தகுதி: புவியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
களப்பணியில் நடைமுறை அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ADVERTISEMENT

விண்ணப்பத்தாரர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயதுவரம்பு இல்லை.  மற்று பிரிவினர் 18 - 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.6.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT