அரசுப் பணிகள்

தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தினமணி


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் துறையில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிம் இருந்து வரும் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அறிவிப்பில் வெளியிட்டுள்ளவாறு, நாள்தோறும் சம்பளம் வழங்கப்படும். 

பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: professional Assistant-I
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.821 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Professional Assistant-II
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.771 வழங்கப்படும்.
தகுதி: எம்சிஏ, எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Clerical Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு486 வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Peon
காலியிடங்கள்: 3
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.424 வழங்கப்படும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தபால் கவரின் மீது பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Chairman, Anna University Sports Board, Anna University, Chennai - 600 025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.2.2023

மேலும் விவரங்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT