அரசுப் பணிகள்

துணை ராணுவத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

12th Jan 2023 01:24 PM

ADVERTISEMENT


இந்திய ராணுவத்தின் துணை ராணுவங்களில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில் நிரப்பப்பட உள்ள 95 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Rifleman General Duty(GD) - 81
பணி: Havildar Clerk - 1
பணி: Warrent Officer RM - 1
பணி: Warrent Officer Draftmans - 1
பணி: Rifleman Armourer - 1
பணி: Rifleman NA - 1
பணி: Rifleman BB - 1
பணி: Rifleman Carp - 1
பணி: Rifleman Cook - 4
பணி: Rifleman Safai - 1
பணி: Rifleman WM - 1

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தட்டச்சுப்பயிற்சி, பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

ADVERTISEMENT

வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி Rifleman General Duty (GD),  Havildar Clerk, Warrent Officer, Draftmans பதவிக்கு 18 முதல் 25க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 18  முதல் 23-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://assamrifles.gov.in என்ற கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி :
DIRECTORATE GENERAL ASSAM,
RIFLES (RECRUITMENT BRANCH),
LAITKOR, SHILLONG,
MEGHALAYA - 793010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  22.1.2023

மேலும் விவரங்கள் அறிய  http://assamrifles.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT