அரசுப் பணிகள்

அரசு நூலகங்களில் வேலை வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

தினமணி

ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 35 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாளாகும். 

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி,  தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரியில் நூலகர் 8 இடங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் 1 இடம், மாவட்ட நூலக அலுவலர் 3 இடங்கள் என 12 இடங்கள். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். 

மேற்கண்ட பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.57,700 - 2,11,500, ரூ.56,100 - 2,08,700, ரூ.56,100 - 2,05,700 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று பொதுத் துறையின் கீழ் தலைமைச் செயலக நூலகம் நூலக உதவியாளர் 2 இடங்கள், பொது நூலக துறையில் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் 21 இடங்கள் என 23 இடங்கள். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. 

மேற்கண்ட பதவிகளுக்கு மாதம் ரூ.35,400 - 1,30,400, ரூ.19,500 - 71,900 சம்பளமாக வழங்கப்படும். 

நூலகத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருப்பவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

மேற்கண்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 6 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.1 மணி முதல் மார்ச் 8 ஆம் தேதி இரவு 11.59 வரை திருத்தம் செய்யலாம். 

மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மே 13 ஆம் தேதி காலை முதல் தாள் தேர்வும், பிற்பகல் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். 

எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT