அரசுப் பணிகள்

சிவில் முடித்தவர்களுக்கு வாய்ப்பு... 1083 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

DIN


ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு மார்ச் 4 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 
பணி: பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் 
காலியிடங்கள்: 794

பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 236

பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 18

பணி: வரைவாளர் நிலை.III
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400

பணி: முதலாள்.நிலை.II
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 32, 37 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு மையம்:  சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.3.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT