அரசுப் பணிகள்

விளையாட்டு வீரர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை: செப்.5-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

28th Aug 2023 01:17 PM

ADVERTISEMENT


இந்தியன் வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 11

விளையாட்டுப் பிரிவு வாரியான காலியிடங்கள்:
1. கூடைப்பந்து - 3 (ஆண்)
2. கிரிக்கெட் -2 (ஆண்)
3. ஹாக்கி -4 (ஆண்)
4. வாலி பால் (செட்டர், அட்டாக்கர் அல்லது பிளாக்கர்) - 2 (ஆண்)

பணி: கிளார்க்
சம்பளம்: மாதம் ரூ.17,900 - 47,920
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் ஜூனியர், சீனியர் நேஷனல்ஸ், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: அதிகாரி 
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதி: ரஞ்சி கோப்பை அல்லது துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி, 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100. இதர அனைத்து பிரிவினரும் ரூ.700 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.9.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT