அரசுப் பணிகள்

சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

31st Oct 2022 02:59 PM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Medical Officer - 19
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் முடித்து
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Staff Nurse 
காலியிடங்கள்: 39
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது அல்லது நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Member Secretary, Chennai City Urban Health Mission
Public Health Department, Ripon Buildings,
Chennai – 600 003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 10.11.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT