அரசுப் பணிகள்

குரூப் 1 தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு

29th Nov 2022 04:09 PM

ADVERTISEMENT

கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. 

துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள 92 காலிப் பணியிடங்களுக்கு நவ.19 (சனிக்கிழமை) தோ்வு நடைபெற்றது.

தோ்வை எழுதுவதற்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்திருந்தனா். இதில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 போ் தோ்வு எழுதவில்லை. 

இந்த முறை 200 கேள்விகள் கொண்ட தேர்வு வினாத்தாள் 140 பக்கங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒவ்வொரு கேள்வியும் பெரிதாக இருந்ததால் விடையளிக்க தாமதம் ஏற்பட்டதாகவும் தேர்வர்கள் கூறினர். 

ADVERTISEMENT

இந்நிலையில், குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. 4 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

குரூப் 1 தேர்வு விடைகள் - இங்கே கிளிக் செய்யவும்
 

Tags : TNPSC group 1
ADVERTISEMENT
ADVERTISEMENT