அரசுப் பணிகள்

விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.58,600 சம்பளத்தில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலை!

26th Nov 2022 11:22 AM

ADVERTISEMENTதிருவொற்றியூர்‌, அருள்மிரு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில்‌ காலியாக உள்ள ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர், வேதபாராயணம், காவலர், உதவி சுயம்பாகம், உதவி பரிச்சாரகம், சமையலர், சமையல் உதவியாளர் மற்றும் துப்புரவாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: திருவொற்றியூர்‌, அருள்மிரு தியாகராஜ சுவாமி திருக்கோயில்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: ஓட்டுநர் - 1 
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

ADVERTISEMENT

பணி: தபேதார் - 1 
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி மின் பணியாளர் - 1 
தகுதி: அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால்‌ வழங்கப்பட்ட மின்‌, மின்கம்பியாளர்‌ பாடப்பிரிவில்‌ ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: வேதபாராயணம் - 1 
தகுதி: தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. யாதொரு சமயநிறுவனங்களால்‌ அல்லது அரசு நிறுவனங்களால்‌ நடத்தப்படும்‌ ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில்‌ ‘தொடர்புடைய துறையில்‌ குறைந்தபட்சம்‌ மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400 

பணி: காவலர் - 2 
தகுதி: தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: உதவி சுயம்பாகம் - 2 
பணி: உதவி பரிச்சாரகம் - 1 
தகுதி: தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. கோயில்களின்‌ பழக்க வழக்கங்களுக்‌கேற்ப நெய்வேத்தியம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயாரிக்கத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.
சம்பளம்: மாதம் ரூ.10,000 – 31,500

பணி: சமையலர் - 1 
தகுதி: தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில்‌ 3 ஆண்டுகள்‌ அணுபவம்‌ பெற்றிருக்க. வேண்டும்‌.
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

பணி: சமையல் உதவியாளர் - 1
தகுதி: தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
சம்பளம்: மாதம் ரூ.6,900 - 21,500

பணி: துப்புரவாளர் - 1
தகுதி: தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.
சம்பளம்: மாதம் ரூ.4,200 - 12,900

வயது வரம்பு: 1.7.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்..

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருவொற்றியூர், சென்னை -19 " என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பபட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 19.12.2022

மேலும் விவரங்கள் அறிய  hrce.tn.gov.in அல்லது https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/81/704/document_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT