அரசுப் பணிகள்

ரூ.2,05,700 சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!

9th Dec 2022 11:17 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். 33/2022

பணி: உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவம் உளவியலாளர்

காலியிடங்கள்: 24

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி கணக்கிடப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தகுதி: உளவில் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் அல்லது முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவ உளவியல் பட்டம் அல்லது மருத்துவ உளவியலில் டிப்ளமோ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வுக் கட்டணம்: பதிவுக் கட்டணம் - ரூ .150, கணினி வழித் தேர்வுக் கட்டணம் - ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT