அரசுப் பணிகள்

வாய்ப்பு உங்களுக்குதான்... என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

8th Dec 2022 02:28 PM

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் ஓவர்மேன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Junior Overman (Trainee) S1 Grade
சம்பளம்: மாதம் ரூ.31,000 - 1,00,000
காலியிடங்கள்: Neyveli Mines, Tamil Nadu - 46, Barsingsar Mines, Rajasthan -3, Talabira Mines, Odisha - 2
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ இன் சுரங்கம் அல்லது சுரங்க பொறியியல் அல்லது அதற்கு இணையான பிற தகுதிகள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் தகுதிச் சான்றிதழ் அல்லது சுரங்கத் துறையில் ஏதேனும் சான்றிதழ் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Junior Surveyor (Trainee)
சம்பளம்: மாதம் ரூ.31,000 - 1,00,000
காலியிடங்கள்: Neyveli Mines, Tamil Nadu - 13, Barsingsar Mines, Rajasthan  - 1, Talabira Mines, Odisha - 1
தகுதி: பொறியியல் துறையில் சுரங்க பொறியியல் படிப்பில் டிப்ளமோ (அல்லது) சுரங்க பொறியியலில் பட்டம் (அல்லது) டிப்ளமோ இன் சுரங்க சர்வேயிங் (அல்லது) டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினியரிங் பட்டம் மற்றும்
சர்வேயிங் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: Sirdar (Selection Grade-I)
சம்பளம்: மாதம் ரூ.26,000 - 3% - 1,10,000
காலியிடங்கள்: Neyveli Mines, Tamil Nadu -133, Barsingsar Mines, Rajasthan - 14
தகுதி: பொறியியல் துறையில் சுரங்க பொறியியல் தவிர வேறு ஏதேனும் பாடத்தில் டிப்ளமோ அல்லது பட்டம் மற்றும் சுரங்க சர்தார் தகுதிச் சான்றிதழ் மற்றும் முதலுதவி சான்றிதழ். (அல்லது) ஓவர்மேன் திறன் சான்றிதழுடன் சுரங்கத்தில் டிப்ளமோ மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.11.2022 தேதியின்படி பொது, இடபுள்யுஎஸ் பிரிவினர் 30க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 33க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT