பொதுத்துறை வங்கியான பாராத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 65 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
பணி: Specialist cadre officer(Manager,Circle Advisor)
காலியிடங்கள்: 65
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம், பிஇ., பி.டெக்., எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.760, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careersஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.12.2022
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.