அரசுப் பணிகள்

ரூ.1,51,100 சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

1st Dec 2022 02:31 PM

ADVERTISEMENTமத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையில் நிரப்பப்பட உள்ள துணைப்பிரிவு பொறியாளர், ஜூனியர் டெலிகாம் அதிகாரி, தனி உதவியாளர், சுருக்கெழுத்தர் கிரேடு ‘சி’ பணிக்கான 14 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

நிறுவனம்: Department of Telecommunication

பணி: Sub Divisional Engineer -7
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100

பணி: Junior Telecom Officer - 2
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

ADVERTISEMENT

பணி: Personal Assistant
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

பணி: Stenographer Grade ‘C’
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2, டிப்ளமோ, பி.இ., பி.டெக் என அறிவிக்கப்பட்டுள்ள பணித்தொடர்பான ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: அதிகபட்சம் 56க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியின் அடிப்படையில் (பிரதிநிதித்துவம்) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

O/o The Senior Deputy Director General, DoT, Gujarat LSA 1st Floor, P & T Admin Building, Khanpur, Ahmedabad - 380001 Gujarat. 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT