செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

சவூதியில் மருத்துவப் பணிகளுக்கு ஜூன் 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

Published: 09th June 2019 03:00 AM

சவூதி அரேபிய நாட்டின் ரியாதிலுள்ள மருத்துவமனையின் பல்வேறு பணிகளுக்கு வரும் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ரியாதிலுள்ள முன்னணி மருத்துவமனையில் மருத்துவர்கள் (ஆண்/ பெண்), பார்மஸிஸ்ட் (ஆண்/ பெண்), ஓ.டி. டெக்னிஸியன், எக்ஸ் ரே டெக்னிஸியன், லேப் டெக்னிஸியன் (ஆண்), பிஸியோதெரபிஸ்ட், செவிலியர்கள், ரேடியாலஜிஸ்ட், மைக்ரோ பயாலஜிஸ்ட், இ.சி.ஜி டெக்னிஸியன் போன்ற பல்வேறு காலிப் பணி இடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. 
மருத்துவர் பணிக்கு 55 வயதுக்கு மிகாமல் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். மற்ற பணிகளுக்கு 2 வருட பணி அனுபவத்துடன் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
ஊதியமானது மருத்துவர்களுக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ஆகவும் , மைக்ரோ பயாலஜிஸ்ட், எக்ஸ் ரே டெக்னிஸியன்களுக்கு ரூ.76 ஆயிரமாகவும், செவிலியர்கள், லேப் டெக்னிஸியன், இ.சி.ஜி டெக்னிஸியன், ஓ.டி டெக்னிஸியன், பார்மஸிஸ்ட், பிஸியோதெரபிஸ்ட், ரேடியாலஜிஸ்ட் போன்ற பணிகளுக்கு ரூ.67 ஆயிரமாகவும் அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டு அனுபவத்துக்கு ஏற்றவாறு அதிகரித்து வழங்கப்படும். 
மேலும் இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்துக்குள்பட்டு வழங்கப்படும்.
இதற்குத் தகுதியுள்ளவர்கள் ovemclsn@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 14 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு  www.omcampower.com  என்ற இணையதளத்தையோ 044 - 2250 5886 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வேலை வேண்டுமா..? அழைக்கிறது பாரத் பெட்ரோலிய நிறுவனம்
ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் BECIL-ல் நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி 
மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்:  ஆக. 31-க்குள்  விண்ணப்பிக்கலாம்
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை
வேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை