வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிடாதீங்க... இந்திய உணவுக் கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

தினமணி


இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்சிஐ) டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான 5054 காலியிடங்களுக்கான சூப்பரான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எந்தெந்த மண்டலங்களில் எந்ததெந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, தகுதிகள் என்பது குறித்து பார்ப்போம்.

விளம்பர எண். 01/2022-FCI Category III

மொத்த காலியிடங்கள் : 5,054

வடக்கு மண்டலம்: 
பணி: J.E. (Civil Engineering) - 22
பணி: J.E. (Electrical / Mechanical Engineering) - 08
பணி: Steno. Grade-II - 43
பணி: AG-III (General) - 463
பணி: AG-III (Accounts) - 142
பணி: AG-III (Technical) - 611
பணி: AG-III (Depot) - 1063
பணி: AG-III (Hindi) - 36

தெற்கு மண்டம்:
பணி: J.E. (Civil Engineering) - 05
பணி: Steno. Grade-II - 08
பணி: AG-III (General) - 155
பணி: AG-III (Accounts) - 107
பணி: AG-III (Technical) - 257
பணி: AG-III (Depot) - 435
பணி: AG-III (Hindi) - 22

கிழக்கு மண்டலம்:
பணி: J.E. (Civil Engineering) - 07
பணி: J.E. (Electrical / Mechanical Engineering) - 02
பணி: Steno. Grade-II - 08
பணி: AG-III (General) - 185
பணி: AG-III (Accounts) - 72
பணி: AG-III (Technical) - 184
பணி: AG-III (Depot) - 283
பணி: AG-III (Hindi) - 17

மேற்கு மண்டலம்
பணி: J.E. (Civil Engineering) - 05
பணி: J.E. (Electrical / Mechanical Engineering) - 02
பணி: Steno. Grade-II - 09
பணி: AG-III (General) - 92
பணி: AG-III (Accounts) - 45
பணி: AG-III (Technical) - 296
பணி: AG-III (Depot) - 258
பணி: AG-III (Hindi) - 06

வடகிழக்கு மண்டலம்:
பணி: J.E. (Civil Engineering) - 09
பணி: J.E. (Electrical / Mechanical Engineering) - 03
பணி: Steno. Grade-II - 05
பணி: AG-III (General) - 53
பணி: AG-III (Accounts) - 40
பணி: AG-III (Technical) - 48
பணி: AG-III (Depot) - 15
பணி: AG-III (Hindi) - 12

தகுதிகள்: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், தட்டச்சில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன், கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பவர்கள், விவசாயத்துறையில் இளநிலை பட்டம், தாவரவியல், விலங்கியல், உயிரியல்-தொழில்நுட்பம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், உணவு அறிவியல், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில்  பிஇ, பி.டெக் முடித்தவர்கள், ஹிந்தியை முதன்மைப் பாடமாகக் கொண்டு ஆங்கிலத்தில் பட்டம், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்புக்கான சான்றிதழ், டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்  பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி 25, 27, 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்: J.E. (Civil, Electrical, Mechanical Engineering) பணிகளுக்கு  மாதம் ரூ.34,000-1,03,400, Steno. Grade-II பணிக்கு மாதம் ரூ.30, 500-88,100, AG-III (General) பணிக்கு மாதம் ரூ.28,200-79,200, AG-III (Accounts) பணிக்கு மாதம் ரூ. 28,200-79,200, AG-III (Technical) பணிக்கு மாதம் ரூ. 28,200-79,200, AG-III (Depot) பணிக்கு மாதம் ரூ.28,200-79,200,  AG-III (Hindi) பணிக்கு மாதம் ரூ.28,200-79,200 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.recruitmentfci.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT