வேலைவாய்ப்பு

ரூ.92 ஆயிரம் சம்பளத்தில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் வேலை!

24th Sep 2022 01:57 PM

ADVERTISEMENT


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assitant Sub-Inspector(ASI)(Stenographer)
காலியிடங்கள்: 104
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதி அதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Head Constable(Ministerial)
காலியிடங்கள்: 355 (ஆண்கள் 319, பெண்கள் 36)
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீ இருக்க வேண்டும். பெண்கள் 155 செ.மீ உயரம் இருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா..? எஸ்பிஐ வங்கியில் 1,673 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்பு!

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை: சிஐஎஸ்எப் ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மிஸ் பண்ணிடாதீங்க... பட்டதாரிகளுக்கு ஆர்பிஐ-இல் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.10.2022

மேலும் விவரங்கள் அறிய www.cisfrectt.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT