வேலைவாய்ப்பு

ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

21st Sep 2022 02:41 PM

ADVERTISEMENT


நொய்டாவில் உள்ள பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 22 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.190

பணி: Assistant Dietician

காலியிடங்கள்: 8

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.26,000

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  Food & Nutrition பாடத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்று மருத்துவக் கல்லூரி அல்லது நர்சிங் கல்லூரியில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: perfusionist
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்து Perfusion Technology பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்து clincal Perfusion பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Librarian
காலியிடங்கள்: 5
சம்பளம்: ரூ.21,970
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி பட்டப்படிப்புடன் பி.எல்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். நூலகர் பணி அனுபவம் பெற்றிருப்பது ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்ய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி, எஸ்டி. மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/69d36fc8230f1ecbc98ddc679db51d4a.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT